ADDED : ஜூலை 08, 2026 03:30 PM
போடி, ஜூலை 9 -
போடி மெயின் ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது.
தமிழகம், கேரளாவை இணைக்கும் மூணாறு, போடிமெட்டு, குரங்கணி, டாப்ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மெயின் ரோடாக போடி அமைந்து உள்ளது. தினமும் தமிழகம், கேரளா பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். போடி காமராஜ் பஜார், பி.ஹைச். ரோடு, தேவாரம் மெயின் ரோட்டில் தட்டிகள், பிளாட்பாரக் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் 60 அடி ரோடு 30 அடியாக சுருங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமம் அடைந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள நெடுஞ்சாலைத்துறை பிரசாரம் செய்தது. இதனை ஒட்டி ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் தாங்களாகவே பிளாட்பார கடைகள், தட்டிகள் அகற்றிக் கொண்டனர்.
நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் இளம்பூரணம் தலைமையில் உதவி பொறியாளர் ராஜாராம், போடி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சுகதேவ், நகர சர்வேயர் ரியாசுதீன், போலீசார் முன்னிலையில் காமராஜ் பஜார், பி.ஹைச் ரோடு தேவாரம் மெயின் ரோட்டில் அகற்றப்படாமல் இருந்த ஆக்கிரமிப்புகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
