/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜீப்-, பஸ் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 14 பேர் காயம்
/
ஜீப்-, பஸ் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 14 பேர் காயம்
ஜீப்-, பஸ் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 14 பேர் காயம்
ஜீப்-, பஸ் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 14 பேர் காயம்
ADDED : நவ 13, 2025 12:21 AM

கூடலுார்: குமுளி அருகே தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் மீது தனியார் பஸ் மோதியதில் 14 பேர் காயமடைந்தனர்.
கூடலுார், கம்பம் பகுதியில் இருந்து தினந்தோறும் இடுக்கி மாவட்டத்தில் குமுளி, ஜக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை ஆகிய பகுதிகளில் உள்ள ஏல தோட்டங்களுக்கு விவசாயப் பணிகளுக்காக 800க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று திரும்புவார்கள்.
நேற்று காலையில் கம்பம், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த16 பெண் தொழிலாளர்கள் குமுளி அருகே 8ம் மைலில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றனர். டிரைவர் அபி வாகனத்தை ஓட்டினார். 8ம் மைல் அருகே ஜீப் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் ஜீப்பின் முன் பகுதி நொறுங்கியது. கம்பத்தைச் சேர்ந்த மலர்கொடி, ராதா, சிட்டம்மாள், பிரியா, ரெஜினாதேவி, சவுந்தர்யா, காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரோகினி, பாலம்மாள், மலர்கொடி, சுவேதா, வளர்மதி, அமுதா உட்பட 14 பெண் தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். கம்பம் அரசு மருத்துவமனை மற்றும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குமுளி போலீசார் விசாரிக்கின்றனர்.

