/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் கவுன்சிலர்கள் 17 பேர் ராஜினாமா
/
கம்பம் கவுன்சிலர்கள் 17 பேர் ராஜினாமா
ADDED : டிச 02, 2025 04:28 AM
கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த வனிதா தலைவராகவும், சுனோதா துணை தலைவராகவும் உள்ளனர். நகராட்சியில் தி.மு.க., - 24, காங்., - 1, இ.யூ.மு.லீக்., - 1, அ.தி.மு.க., - 7 கவுன்சிலர்கள் இருந்தனர்.
இங்கு, கவுன்சிலர்களுக்கும், தலைவருக்கும் மோதல் ஏற்பட்டது. தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தோல்வியடைந்தது. அமைச்சர் நேரு நடத்திய பேச்சிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
நேற்று மாலை நகராட்சி அவசர கூட்டத்தில், தலைவர், கவுன்சிலர்கள் இடையே பிரச்னை ஏற்பட, அதிருப்தியடைந்த தி.மு.க., கவுன்சிலர்கள், 14 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 3 பேர் என, 17 பேர் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி, ராஜினாமா கடிதத்தை கமிஷனரிடம் வழங்கினர்.
கமிஷனர் உமாசங்கர் கூறுகையில், ''17 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.

