/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ்சில் கடத்திவரப்பட்ட 23 கிலோ கஞ்சா பறிமுதல்; பெரியகுளத்தில் அண்ணன், தங்கை உட்பட 7 பேர் கைது

ADDED : டிச 07, 2025 05:20 AM

பெரியகுளம்: ஒடிசாவை சேர்ந்த சந்தோஷ்பானி 26, தங்கை ஜோஸ்னாபானி 25,உட்பட 7 பேர் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு 22.840 கிலோ கஞ்சா கடத்தி வந்தபோது போலீசார் கைது செய்தனர்.
போடி தாலுகா அகமலை ஊராட்சி சொக்கன்அலையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 32. ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டம் ஷெல்லிகோடா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்பானி. இருவரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் போது நண்பராகினர். இந்நிலையில் ஒடிசாவில் இருந்து பெரியகுளம்,தேனி பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்வதற்கு திட்டமிட்டனர்.
இதற்காக 22.840 கிலோ கஞ்சாவை திருப்பூருக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து கஞ்சாவுடன் ஈஸ்வரன், அகமலையைச் சேர்ந்த ஆனந்தராஜ் 27, சந்தோஷ்பானி, இவரது தங்கை ஜோஸ்னாபானி, ராஜபாளையம் முகவூரைச் சேர்ந்த அருண் 26,ஆந்திரா மில்லையாபுட்டிரைச் சேர்ந்த தாரகேஷ்வர் பாரிகோ 41, அகமலையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய ஏழு பேர் திருப்பூரிலிருந்து தேனி செல்லும் பஸ்சில் ஏறி வந்தனர். கஞ்சாவை பிரிந்து விற்பனை செய்ய முடிவு செய்து நேற்று பெரியகுளம் கல்லுாரி விலக்கு பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தனர். அப் பகுதியில் ரோந்து சென்ற தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த், எஸ்.ஐ., இதிரிஸ்கான், சிறப்பு எஸ்.ஐ., திருப்பதிராஜா ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேரிடம் சோதனையிட்டனர். அவர்களிடம் 11 பொட்டலங்களில் இருந்த 22.840 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யய்பட்டது. ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.