/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையத்தில் 35 பவுன் நகை ரூ.50 ஆயிரம், காருடன் கொள்ளை
/
உத்தமபாளையத்தில் 35 பவுன் நகை ரூ.50 ஆயிரம், காருடன் கொள்ளை
உத்தமபாளையத்தில் 35 பவுன் நகை ரூ.50 ஆயிரம், காருடன் கொள்ளை
உத்தமபாளையத்தில் 35 பவுன் நகை ரூ.50 ஆயிரம், காருடன் கொள்ளை
ADDED : நவ 07, 2024 02:05 AM

உத்தமபாளையம்,:தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் மதிப்பிலான நகை, பணம், கார் கொள்ளை போனது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியில் ஆர். கே. கார்டன் பகுதியில் வசிப்பவர் ராஜன் 55, இதே ஊரில் மருந்து கடை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள தன் மகன் வீட்டில் தீபாவளி கொண்டாடுவதற்காக அக். 29 ல் சென்றார். வீட்டிற்கு முன்பு தனது காரையும் நிறுத்தி இருந்தார்.
சம்பவத்தன்று மர்ம நபர்கள் வீட்டிற்கு முன் இருந்த சிசிடிவி கேமராவில் கருப்பு கலர் ஸ்பிரேயை அடித்துள்ளனர். பின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதில் இருந்த 35 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து உள்ளனர். பின் வீட்டிற்கு வெளியில் நிறுத்தியிருந்த காரையும் திருடி சென்றனர்.
நேற்று காலை சென்னையில் இருந்து வந்த ராஜன் வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த காரை காணாது பதறி வீட்டிற்குள் சென்று பார்த்த போது, நகை, பணம், கார் என மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. ராயப்பன்பட்டி போலீசார், தடயவியல் நிபுணர்கள் மூலம் பதிவுகளை சேகரித்தனர். சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்ததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை.