/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மாவட்ட காங்., தலைவர் பதவிக்கு 82 பேர் விண்ணப்பம் 'நீயா.. நானா..' போட்டியில் 6 நிர்வாகிகள்

ADDED : டிச 09, 2025 06:29 AM
தேனி: தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 82 பேர் விண்ணப்பித்த நிலையில், அகில இந்திய காங்., தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ள ஆறு பேரிடையே 'நீயா.. நானா..' போட்டி நிலவுகிறது.
தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவராக 23 ஆண்டுகளாக முருகேசன் உள்ளார். புதிய மாவட்டத் தலைவர் நியமிக்க சையது அஜ்மத்துல்லா ஹூசைனி நியமிக்கப்பட்டார். அவர் தேனி மாவட்ட சட்டசபை தொகுதிகளில் நவ.27 முதல் நவ.30 வரை பூத் கமிட்டி, ஆலோசனை கூட்டங்களை நடத்திய பின், மாவட்ட தலைவர் பதவிக்கு 82 பேரிடம் விண்ணப்பங்களை பெற்றார். அதில் 28 பேரிடம் நேர்காணல் நடத்திய ஹிசைனி, பொதுப் பிரிவு, மகிளா காங்., சிறுபான்மையினர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு, இளைஞர் பிரதிநிதி என 6 பேர் அடங்கிய பட்டியலை தலைமைக்கு அனுப்பி உள்ளார். அகில இந்திய தலைமை ஒருவரை தேர்வு செய்து விரைவில் அறிவிக்க உள்ளது. இதனால் மாவட்டத் தலைவர் பதவிக்காக 6 பேரிடம் நியா, நானா என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.