சுருளி அருவி ரோட்டில் பாதி வரை நீண்ட மேடு வாகன விபத்து அபாயம்
சுருளி அருவி ரோட்டில் பாதி வரை நீண்ட மேடு வாகன விபத்து அபாயம்
ADDED : ஜூலை 04, 2026 11:54 PM

கூடலுார்: கூடலுாரில் இருந்து சுருளி அருவி செல்லும் ரோட்டில் தனியார் விளைநிலத்திற்கு செல்லும் பாலத்திற்காக ரோட்டின் பாதி வரை மேடு அமைத்ததால் வாகன விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுாரில் இருந்து குள்ளப்பகவுண்டன்பட்டி விலக்கு, கருநாக்கமுத்தன்பட்டி வழியாக சுருளி அருவி செல்ல 12 கி.மீ., துார ரோடு உள்ளது. கேரளாவில் இருந்து அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து அருவிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அங்கிருந்து கேரளா செல்ல இதே பாதையில் அதிகம் செல்கின்றனர். மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிகம்.
வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டின் துவக்கப் பகுதியில் தனியார் விளைநிலத்திற்கு செல்வதற்காக கழிவு நீரோடையின் மீது பாலம் அமைத்துள்ளனர். இப் பாலத்தில் இருந்து ரோட்டை இணைக்க மேடு அமைத்துள்ளனர். ரோட்டின் பாதி வரை இந்த மேடு அமைத்துள்ளதால் நீண்ட தொலைவில் இருந்து வரும் வாகனங்களும், இரவில் வரும் வாகனங்களும் இப்பகுதியில் விபத்தில் சிக்கி வருகின்றன.
திடீரென மேடு இருப்பதால் டூவீலர்கள் செல்பவர்களும் விழுந்து காயமடைகினறனர். வாகன ஓட்டிகள் பல மாதங்களாக தகவல் தெரிவித்தும் மாநில நெடுஞ்சாலை துறையினர் கண்டுகொள்ளவில்லை. மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் ரோடு வரை வந்த மேட்டை அகற்ற அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
