தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆவணி முகூர்த்தம், சுப நிகழ்ச்சி வாழைத்தார்கள் விலை உயர்வு

ஆவணி முகூர்த்தம், சுப நிகழ்ச்சி வாழைத்தார்கள் விலை உயர்வு

ஆவணி முகூர்த்தம், சுப நிகழ்ச்சி வாழைத்தார்கள் விலை உயர்வு


UPDATED : செப் 02, 2026 05:18 PM

ADDED : செப் 02, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 05:18 PM ADDED : செப் 02, 2026 05:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரியகுளம்:ஆவணி சுபமுகூர்த்தம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழைப்பழம் தேவை அதிகரிப்பால் அதன் விலை உயர்ந்துள்ளது.

பெரியகுளம் தாலுகாவில் பல ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது போதிய மழை இல்லாததாலும், வெயில் தாக்கத்தால் வாழை விளைச்சல் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வாழை தேவை அதிகரித்துள்ளது. ஆவணியில் திருமணம், வளைகாப்பு, காதணி விழா உட்பட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடந்து வருகிறது. ஜனவரியில் ரூ.500 முதல் ரூ.750 விலையில் இருந்த வாழை இலை கட்டு தற்போது ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் ஆக விலை உயர்ந்துள்ளது.

சத்யமங்கலத்திலிருந்து வரும் செவ்வாழை: தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவ குணம், இனிப்பு மற்றும் மணத்திற்கு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. சுப நிகழ்ச்சி சீர்வரிசை தட்டுகளில் வாழைப்பழம் முக்கிய இடம் பெறுகிறது. ஜன.,யில் ஒரு தார் கற்பூரவல்லி ரூ.300 க்கு விற்றது. தற்போது ரூ.ஆயிரம் ஆக உள்ளது. ரூ.600 க்கு விற்ற செவ்வாழை ரூ.2 ஆயிரம், ரூ.200 முதல் ரூ.300 க்கு விற்ற பூவன் ரூ.700, இதே போல் அனைத்து வாழை ரகங்களும் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து கமிஷன் கடை உரிமையாளர் பாலசுப்பிரமணி கூறுகையில், 'ஆவணி முகூர்த்தம், கிருஷ்ணர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. பெரியகுளம் தாலுகா பகுதியில் செவ்வாழை விளைச்சல் குறைவினால், சத்தியமங்கலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது,' என்றார்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us