/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடிந்து விழும் அபாயத்தில் அங்கன்வாடி கட்டடம் புதிய கட்டடம் திறக்காத அவலம்

ADDED : நவ 14, 2025 04:55 AM

உத்தமபாளையம்: பண்ணபுரத்தில் அங்கன்வாடி கட்டடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் அருகே ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி புதிய கட்டடம் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
பண்ணைப்புரம் பேரூராட்சி, விநாயகர் கோயில் தெருவில் உள்ள அங்கன்வாடியில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இக் கட்டடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் சிமென்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது.
கட்டடம் மேசமாக இருப்பதை தொடர்ந்து ராஜ்ய சபா எம்.பி. இளையராஜா தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.30 லட்சம் செலவில், புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி கட்டடம் திறந்து பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. கனமழை மழை பெய்தால் தற்போதுள்ள அங்கன்வாடி கட்டடம் இடியும் அபாயத்தில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அங்கன்வாடி புதிய கட்டடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.