/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி ஐயப்ப பக்தர்கள் 'குஷி'
/
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி ஐயப்ப பக்தர்கள் 'குஷி'
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி ஐயப்ப பக்தர்கள் 'குஷி'
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி ஐயப்ப பக்தர்கள் 'குஷி'
ADDED : டிச 09, 2025 06:34 AM

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 5 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தண்ணீர் வரத்து சீரானதால் வனத்துறை குளிக்க அனுமதித்தது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது.கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்காணல், பாம்பார்புரம் பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
டிட்வா புயல் மழையால் நவ.30. டிச. 1ல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தண்ணீர் வரத்து சீரானதால் டிச.2 ல் குளிக்க அனுமதியும், மீண்டும் வெள்ளப்பெருக்கினால் மறுநாள் டிச.3 முதல் டிச.7வரை 5 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் டிச.7 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குளிக்க அனுமதித்கப்படுவர் என ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிப்பகுதிக்கு வந்தனர்.
அருவியில் தண்ணீரின் வேகம், அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்ததால் அனுமதிக்க வில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் நேற்று காலை நீர் வரத்து சீரானதால் வனத்துறை குளிக்க அனுமதித்தனர்.
சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பிய ஏராளமான சென்னை, திருச்சி, திண்டுக்கல் மாவட்ட ஐயப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். -

