/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சட்டக்கல்லூரி மாணவரை தாக்க வந்த 4 பேர் மீது வழக்கு மாணவரை தாக்க வந்த 4 பேர் மீது வழக்கு

ADDED : டிச 09, 2025 06:31 AM
பெரியகுளம்: பெரியகுளம் எ.புதுக்கோட்டை அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் 52. சட்டக் கல்லூரியில் படித்து வரு கிறார். மேலும் தங்க நகை அடகு கடை வைத்துள்ளார்.
இவருக்கும் பெரிய குளம் அனுமார் கோயில் தெருவைச் சேர்ந்த சின்னமுத்து 42.க்கும் நிலம் வாங்கி விற்பதில் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சின்னமுத்து இவரது நண்பர் களான ரஞ்சித், ராம்குமார், சேது மற்றும் இருவருடன், அரிவாள் உட்பட ஆயுதங்களுடன் முருகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லை.
சத்தம் கேட்டு வந்த பக்கத்து தோட்டத்துக்காரர் செல்வத்திடம், முருகன் குறித்து விசாரித்துவிட்டு, முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம். முருகன் புகாரில், சின்னமுத்து உட்பட நான்கு பேர் மீது வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.