/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணி நிரந்தரம் செய்வதில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்
/
பணி நிரந்தரம் செய்வதில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்
பணி நிரந்தரம் செய்வதில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்
பணி நிரந்தரம் செய்வதில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்
ADDED : டிச 09, 2025 06:35 AM
தேனி: காமாட்சிபுரம் கூட்டுறவு சங்கத்தின் தற்காலிக பணியாளரை நிரந்தர பணியாளராக மாற்றி 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கிய விவகாரத்தில் எரசக்கநாயக்கனுார் கூட்டுறவு சங்க செயலாளர் ராமரை சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் நர்மதா உத்தரவிட்டுள்ளார்.
காமாட்சிபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளராக ராமர் பணிபுரிந்தார்.
இவர் கடந்த வாரம் எரசக்கநாயக்கனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளராக நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற மறுநாள் அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நர்மதா உத்தரவிட்டார்.
துறை ரீதியாக விசாரணை சஸ்பெண்ட் பற்றி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'காமாட்சிபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிக கணினி இயக்குநராக பணிபுரிந்தவரை 3 ஆண்டுகளுக்கு முன்நிரந்தர பணியாளராக மாற்றப்பட்டுள்ளார்.
ஆய்வில் அந்த பணியாளர் முறைகேடாக நிரந்த பணியாளராக மாற்றியது தெரியவந்துள்ளதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு யார் காரணம், தலைவர்கள் பதவியில் இருந்த காலத்தில் நடந்ததா, அப்போது அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதா என துறை ரீதியாக விசாரணை நடக்கிறது. பிற கூட்டுறவு சங்கங்களில் முறைக்கேடுகள் நடந்துள்ளதா என விசாரித்து வருவதாக,' தெரிவித்தனர்.

