/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் பஜாரில் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து கவுன்சிலரின் கணவர் முரண்டு - கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தம்

ADDED : டிச 09, 2025 06:30 AM

கூடலுார்: கூடலுார் மெயின் பஜாரில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து கவுன்சிலரின் கணவர் முரண்டு பிடித்ததால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
கூடலுார் ராஜாங்கம் சிலையிலிருந்து பள்ளிவாசல் வரையுள்ள மெயின் பஜாரில் வியாபார நிறுவனங்கள் அதிகம்.
கனமழை நேரங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் மெயின் பஜார் வழியாக ஓடி கடைகளுக்குள் புகுந்து விடுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் ரூ.65.5 லட்சம் மதிப்பீட்டில் மெயின் பஜாரின் இரு பகுதிகளிலும் சாக்கடை கால்வாய் கட்டி தார் ரோடு அமைப்பதற்கான பணி சமீபத்தில் துவங்கியது.
தற்போது ராஜாங்கம் சிலையிலிருந்து ஒரு பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் 5வது வார்டு பள்ளிவாசல் அருகே சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் பல்கீசின் கணவர் ஹக்கீம் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து முரண்டு பிடித்தார். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
அப்பொழுது மக்கள் கமிஷனரிடம் புகார் தெருவித்தனர். கமிஷனர் முத்துலட்சுமி, மேற்பார்வையாளர் முத்துக்குமார் நேரில் பார்வையிட்டு விரைவில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி பணி துவக்க உள்ளதாக தெரிவித்தனர்.