/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் தி.மு.க. முறைகேடு: பா.ஜ.,புகார்
/
வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் தி.மு.க. முறைகேடு: பா.ஜ.,புகார்
வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் தி.மு.க. முறைகேடு: பா.ஜ.,புகார்
வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் தி.மு.க. முறைகேடு: பா.ஜ.,புகார்
ADDED : டிச 07, 2025 06:01 AM
தேனி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் தி.மு.க.,வினர் முறைகேடு செய்வதாக தேனி மாவட்ட பா.ஜ., தலைவர் ராஜபாண்டியன் கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் புகார் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் கல்லுாரி மாணவர்களை வைத்து படிவங்கள் பூர்த்தி செய்வதால் குளறுபடி ஏற்பட்டு, பெயர்கள் விடுபட்டுள்ளன. இதுதவிர மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தோர் பட்டியலை பிரித்து எடுத்த பின், சில ஆளுங்கட்சி பிரதிநிதிகள், நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் 6 பி.எல்.ஓ.,க்களை மிரட்டி, அடையாள அட்டை பெற்று படிவங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் மலைச்சாமி, வினோத்குமார், மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, துணைத் தலைவர் சரவணன் உடனிருந்தனர்.