/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவமனையில் திறக்கப்படாத அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்
/
மருத்துவமனையில் திறக்கப்படாத அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்
மருத்துவமனையில் திறக்கப்படாத அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்
மருத்துவமனையில் திறக்கப்படாத அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்
ADDED : ஜூலை 10, 2025 03:21 AM

பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை பிரிவு கட்டடம் பணி முடிந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி வைத்துள்ளனர்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் 700 வெளிநோயாளிகள், 200 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு உள் நோயாளிகள் பிரிவில் இடம் வசதியின்றி சிரமம் அடைந்தனர். இதனால் ரூ.6.50 கோடியில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை அறுவை சிகிச்சை பிரிவு கட்டப்பட்டது. இதில் தரை தளம், முதல் தளம், 2 வது தளம் என மொத்தம் 2220 மீட்டர் லிப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் தீவிர இருதய சிகிச்சை பிரிவு, நவீன ஆப்பரேஷன் தியேட்டர், புற்றுநோய் வலி நிவாரண சிகிச்சை மையம் உட்பட பல்வேறு அறுவை சிகிச்சை மையம் அறைகள் உள்ளன. ஆப்பரேஷன் தியேட்டருக்கு நவீன கருவிகள் ரூ.1.5 கோடியில் வாங்கப்பட்டு. மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு தயார் நிலையில் உள்ளது.
திறக்க வேண்டும்: நவீன ஆப்பரேஷன் தியேட்டர் இல்லாததால், பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் இரவில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புகின்றனர். சிலர் செல்லும் வழியில் இறக்கின்றனர். கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவை பயன்பாட்டிற்கு கொண்டு பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.-

