/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழையால் வாய்க்கால் சேதம் விவசாயிகள் சீரமைப்பு
/
மழையால் வாய்க்கால் சேதம் விவசாயிகள் சீரமைப்பு
ADDED : நவ 14, 2025 04:56 AM
கம்பம்: மழை வெள்ளத்தில் சேதமடைந்த வாய்க்கால் கரைகள், மடைகளை விவசாயிகள் ஒன்று சேர்ந்து சீரமைத்தனர்.
கடந்த அக். 17 ல் பெய்த கனமழையில் கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டது. பின்னர் தேங்கிய நீர் வழிந்த பின் அறுவடை செய்தனர். கம்பம் சின்னவாய்க்கால் , உத்தமுத்து வாய்க்கால் மற்றும் மடைகள் சேதமடைந்தது.
இதனால் நாற்றுகள் வளர்க்கும் பணி தாமதமடைந்தது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செயற்பொறியாளர் சாம் இர்வின் குள்ளப்பகவுண்டன்பட்டியில் சேதமடைந்த தடுப்பணையை ஆய்வு செய்து, பராமரிக்க உத்தரவிட்டார். அதிகாரிகள் சீரமைத்தனர்.
ஆனால் சேதமடைந்த சின்ன வாய்க்கால், உத்தமுத்து வாய்க்கால் கரைகளை விவசாயிகளே பராமரிப்பு செய்தனர்.
குறிப்பாக உத்தமுத்து வாய்க்காலில் 6 ம் நம்பர் மடையை விவசாயிகள் சிரமப்பட்டு சீரமைத்தனர். தற்போது நாற்று வளர்க்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

