நகைக்காக பாட்டி கொலை; பேத்தி, பேரன்கள் சிக்கினர்
நகைக்காக பாட்டி கொலை; பேத்தி, பேரன்கள் சிக்கினர்
ADDED : ஜூலை 03, 2026 11:46 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: நகைக்காக பாட்டியை கொலை செய்த பேத்தி, பேரன்கள் கைதாகினர்.
தேனி மாவட்டம், அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் வாசுத்துரை. இவரது மனைவி ரோசிலின் மேரி. கணவர் இறந்த நிலையில், மகன் ஜெபதாஸ் குடும்பத்தினருடன் வசித்தார். இரு தினங்களுக்கு முன், ரோசிலின் மேரியுடன், பேத்தி குணபாக்கியவதி, 20, துாங்கினார். மறுநாள், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், ரோசிலின் மேரி இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த வளையல், தோடு உட்பட 3 சவரன் நகைகள் மாயமாகி இருந்தன. க.விலக்கு போலீசார் விசாரித்தனர்.
அதில், குணபாக்கியவதி, அவரது 17 வயது தம்பி, உறவினரான வீரபாண்டியை சேர்ந்த அலெக்ஸ், 24, ஆகியோர் சேர்ந்து, ரோசிலின் மேரியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, நகைகளை திருடியது தெரிந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.
