/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிலத்திற்கு அனுமதி பெற்று வண்டல் மண் விற்பனை செய்து முறைகேடு; அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் கொள்ளை போகும் கனிமம்

UPDATED : டிச 07, 2025 07:42 AM
ADDED : டிச 07, 2025 05:55 AM

கண்மாய், குளங்களை ஆழப்படுத்தவும், விளை நிலத்தில் மண் வளத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு 50 யூனிட், புன்செய் நிலத்திற்கு 40 யூனிட் மண் டிராக்டரில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு விவசாயிகள் தங்களின் நிலங்களின் பரப்பளவுக்கு உரிய கணினி சிட்டாவை இணைத்து வருவாய், நீர்வளத் துறை பரிந்துரைக்கு பின் கனிம வளத்துறை மூலம் அனுமதி பெற்று மண் எடுக்க வேண்டும்.
போடி,அம்மாபட்டி, - டொம்புச்சேரி செல்லும் ரோட்டில் உள்ள சென்னையப்ப கவுண்டர் கண்மாய், கரட்டுப்பட்டி, சின்னமனூர் ஒன்றியம் பொட்டிபுரம் உள்ளிட்ட கண்மாய்களில் மண் வியாபாரிகள் விவசாயிகள் பெயரில் வண்டல் அள்ளுகின்றனர்.
ஒரு டிராக்டர் வண்டல் ரூ.2000 முதல் ரூ.2500க்கும், டிப்பர் லாரி ரூ. 5000 முதல் ரூ.6000 விலையில் புதிய கட்டடத்தின் அடித்தளத்திற்கும், செங்கல் சூளைகளுக்கும் விற்பனை செய்கின்றனர். இதனால் அரசின் உண்மையான நோக்கம் சிதைந்து வண்டல் கொள்ளை போகிறது.