/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு மைதானத்தில் சுகாதார வளாகத்திற்கு பூட்டு
/
விளையாட்டு மைதானத்தில் சுகாதார வளாகத்திற்கு பூட்டு
விளையாட்டு மைதானத்தில் சுகாதார வளாகத்திற்கு பூட்டு
விளையாட்டு மைதானத்தில் சுகாதார வளாகத்திற்கு பூட்டு
ADDED : டிச 09, 2025 06:35 AM

பெரியகுளம்: பெரியகுளம் நியூ கிரவுண்ட் விளையாட்டு மைதானத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் சோத்துப்பறை அணை செல்லும் ரோட்டில் நியூ கிரண்ட் விளையாட்டு மைதானம் பழமையானது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்திற்கு தினமும் காலை, மாலை நேரங்களில் 500 க்கும் அதிகமானோர் நடைபயிற்சி, ஓட்டம், பேட்மின்டன், கூடைப்பந்து, வாலிபால், கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டுகளை பலரும் விளையாடுகின்றனர். அவ்வப்போது இங்கு பள்ளிகள் அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது. தினமும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் நடை பயிற்சி செல்கின்றனர். வி.நி.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
விளையாட்டு பாடவேளைகளில் இங்கு வந்து விளையாடி செல்கின்றனர்.
சுகாதார வளாகத்திற்கு பூட்டு விளையாட்டு மைதானத்தில் சுகாதாரம் வளாக வசதி செய்திட வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மைதானத்தில் சரவணக்குமார் எம்.எல்.ஏ, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள், பெண்கள் சுகாதார வளாகம் மற்றும் கூடைப்பந்து, கபடி மைதானத்தை அமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் எம்.பி., தங்க தமிழ் செல்வன், எம்.எல்.ஏ., திறந்து வைத்தனர். சுகாதார வளாகம் மிக பயனுள்ள வகையில் இருந்தது.
திறந்த வெளியில் அசுத்தம் இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளது.
பயிற்சி பெறுவோர் இயற்கை உபாதைக்கு மைதானத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகின்றனர். நடைபயிற்சி செல்வோர் மூக்கை பொத்தி செல்லும் நிலை உருவாகி உள்ளது.
எனவே சுகாதார வளாகத்தை உடனடியாக திறப்பதற்கும் அதனை தினமும் சுத்தம் செய்யும் பணியினை தென்கரை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--

