UPDATED : ஆக 01, 2026 04:59 PM
ADDED : ஆக 01, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
போடி:போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் கண்மாய் கரையோரம் பனை விதைகள் நடும் விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் யோகா ஸ்ரீ, துணைத் தலைவர் கருப்பையா, பசுமை பங்காளர் அமைப்பு நிறுவனர் பனை முருகன் முன்னிலையில் கண்மாய் கரையோரம் 200 பனை விதைகளை நடவு செய்தனர். இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
