நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மனு வழங்கினர்.
மனுவில்,' அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட உள்ளது. ஆனால் கோயில் செல்லும் பாதை சேதமடைந்து உள்ளது. இதனால் பக்தர்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படும். திருவிழா துவங்கும் முன் கோயில் செல்லும் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'. என கோரியுள்ளனர்.

