நீரில் மூழ்கி மூதாட்டி பலி
தேனி: சின்னமனுார் பழனியாண்டி தெரு முத்துப்பிள்ளை 83. சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீரபாண்டி கோயிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் கோயில் பகுதியில் தேடினர். அப்போது வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் இறந்து கிடந்தார். இவரது மகன் முருகன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
45 மது பாட்டில்கள்பறிமுதல் 4பேர் கைது
தேனி: தேனி மதுவிலக்கு எஸ்.ஐ., பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் கைலாசபட்டி, கோட்டூர், வடபுதுப்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விற்பனையில் ஈடுபட்ட கோட்டூர் லட்சுமி53, கருவேல்நாயக்கன்பட்டி செல்வி 41, வடபுதுப்பட்டி பாண்டி 40, கைலாசப்பட்டி உதயகுமார் 33 ஆகியோரை கைது செய்தனர்.

