/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ்சை பயன்படுத்தலாம் சுகாதாரத்துறை அறிவுருத்தல்

ADDED : டிச 09, 2025 06:30 AM
தேனி: மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை கர்ப்பிணிகளை பரிசோதனைக்கு அழைத்துசெல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'' என, மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில் 27 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்குகின்றன. இதில் கம்பம், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி, தேனி ஆகிய மூன்று இடங்களில் கூடுதலாக 6 மாத குழந்தைகளுக்கான அவசர கால சிகிச்சைக்கென தலா ஒரு வாகனங்கள் இயங்குகின்றன.
கர்ப்பிணிகளுக்கு இலவச சேவை: கருவுற்ற பெண்கள் 3 மாதங்கள் முடிந்த நிலையில் 4வது மாதங்களில் இருந்து மாதாந்திர பரிசோதனைகளை முறையாக செய்கின்றனரா என்பதைகிராம சுகாதார செவிலியர்கள் ஆய்வு செய்து, வட்டார மருத்துவர் மூலம், மாவட்ட தாய் சேய் அலுவலருக்கும், மாவட்ட சுகாதாரத்துறைஅலுவலருக்கும் தகவல்களை தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணிகள் வசதிக்காக மாதாந்திர பரிசோதனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அழைத்தால்ஆம்புலன்ஸ் அவர்கள் வசிக்கும் வீடுகளுக்க சென்று அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், நலவாழ்வு மையம், வட்டார சுகாதார நிலையம், மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி ஆகியவற்றிற்கு இலவசமாக அழைத்து செல்லும் சேவை உள்ளது.
இதுகுறித்து கர்ப்பிணிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இச்சேவையைபயன்படுத்துவது குறைந் துள்ளது.
கர்ப்பிணிகள் இச்சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.