/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடுதல் வகுப்பறைகள் கோரி மனு குறைதீர் கூட்டத்தில் குவிந்த பொதுமக்கள்
/
கூடுதல் வகுப்பறைகள் கோரி மனு குறைதீர் கூட்டத்தில் குவிந்த பொதுமக்கள்
கூடுதல் வகுப்பறைகள் கோரி மனு குறைதீர் கூட்டத்தில் குவிந்த பொதுமக்கள்
கூடுதல் வகுப்பறைகள் கோரி மனு குறைதீர் கூட்டத்தில் குவிந்த பொதுமக்கள்
ADDED : டிச 09, 2025 06:33 AM

தேனி: திம்மரசநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்த கோரி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
கலெக் டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆ ண்டிபட் டி தாலுகா மேகமலை ஏகன்ராஜாபோர்டு பாக்கியலட்சுமி, வள்ளல்நபி, மகரஜோதி உள்ளிட்டோர் வழங்கி மனுவில், 'ஏகன்ராஜா போர்டு பகுதியில் விவசாயம் செய்து வசித்து வருகிறோம். வேளாண் இடு பொருட்கள், விளைபொருட்களை பயன்படுத்தும் பச்சை கூமாட்சி வழியாக செல்லும் பாதையை பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் வனத்துறையினர் தடுக்கின்றனர். மீறினால் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்கின்றனர். அந்த பாதையை பயன்படுத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும்',என கோரினர்.
திம்மரசநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மேலாண்மைகுழு தலைவர் ஜெய்சூரியா தலைமையில் நிர்வாகிகள் மனுவில், 'இப்பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். கூடுதல் வகுப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தினர்.
கொடுவிலார்பட்டி ஊராட்சி பள்ளபட்டி தி.மு.க., செயலாளர் வைரமுத்து மனுவில், 'ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் திருமண மண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்தனர். மண்டப கட்டுமான பணிகளை துவக்கவில்லை.
திருமண மண்டபம் அமைக்கும் பணியை துவங்கிடவும், ஜக்கம்மாள் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்,' என்றார்.
நகையை காணவில்லை: உத்தமபாளையம் தாலுகா சுக்காங்கல்பட்டி ராஜீவ்காந்திகாலனி வேல்முருகன் பதாகையுடன் மனு அளிக்க வந்தார். அவரது மனுவில், 'அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நடை அடகு வைத்தேன். 2021 அக்.,ல் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. எனது நகைகடன் தள்ளுபடி செய்யவில்லை. என் நகை பற்றி எந்த தகவலும் இல்லை. எனது நகையை மீட்டுத்தர வேண்டும். தேன் சுடர் பெண்கள் அமைப்பு தலைவி சரிதா தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டிபட்டி தாலுகாவில் அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர், சுகாதார வளாகம், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கூட்டத்தில் மனு அளித்தனர்.

