/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவிகளை பின் தொடர்ந்து ரோமியோக்கள் அட்டகாசம்
/
மாணவிகளை பின் தொடர்ந்து ரோமியோக்கள் அட்டகாசம்
ADDED : டிச 07, 2025 06:00 AM
போடி: போடியில் பள்ளி மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்களின் அட்டகாசத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரியுள்ளனர்.
போடி பஸ்ஸ்டாண்ட் அருகே பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி, திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளுக்கு அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, பத்திரகாளிபுரம், விசுவாசபுரம், டொம்புச்சேரி, காமராஜபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மாணவிகள் ஏராளமானோர் போடி வந்து படிக்கின்றனர். மாணவிகள் பள்ளிக்கு வரவும், வீட்டிற்கு செல்லவும் தினமும் போடி பஸ்ஸ்டாண்டிற்கு வந்து செல்ல வேண்டும். பஸ்சிற்காக மாணவிகள் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர். ரோமியோக்கள் டூவீலர்களில் பின் தொடர்வதும், மாணவிகளிடம் ரகளை செய்வது தொடர்கிறது. மேலும் பி.ஹைச்., ரோடு, ஸ்டேட் பாங்க் செல்லும் ரோடு பகுதிகளில் கூட்டமாக நின்று கொண்டு மாணவிகளை கிண்டல் செய்வது வாடிக்கையாக உள்ளது. அடிக்கடி நடக்கும் சம்பவத்தால் பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர். பள்ளிக்கு சென்று வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட காலை, மாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவும், மாணவிகளை பின் தொடர்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரியுள்ளனர்.

