/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்டமனுார், உத்தமபாளையம் பசுமை பள்ளி திட்டத்தில் தேர்வு
/
கண்டமனுார், உத்தமபாளையம் பசுமை பள்ளி திட்டத்தில் தேர்வு
கண்டமனுார், உத்தமபாளையம் பசுமை பள்ளி திட்டத்தில் தேர்வு
கண்டமனுார், உத்தமபாளையம் பசுமை பள்ளி திட்டத்தில் தேர்வு
ADDED : டிச 02, 2025 04:57 AM
தேனி: மாவட்டத்தில் பசுமை பள்ளிகள் திட்டத்தில் கண்டமனுார், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வாகி உள்ளன
பசுமைப்பள்ளிகள் திட்டம் பற்றி அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.20 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். இந் நிதியில் பள்ளி வளாகத்தில் சோலார் மின் வசதி, ஆழ்துளை கிணறுகள், மழைநீர் சேகரிப்பு, மூலிகை தோட்டம், பழத்தோட்டம், தோட்டங்களுக்கு நீர் பாய்ச்ச நுண்ணீர் பாசன வசதி, மண்புழு உர செயலாக்கல் மையங்கள் அமைக்கப்படுகிறது.
மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் ஆசாரிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, ஜெயமங்கலம், ஓடைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் திட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இந்தாண்டு கண்டமனுார், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் வளாகங்கள் பசுமையாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான உதவிகள் தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளது என்றனர்.

