/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வடிகால் மூடியதால் கழிவு நீர் தேக்கம்
/
வடிகால் மூடியதால் கழிவு நீர் தேக்கம்
ADDED : மார் 17, 2024 06:39 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி, 16 வது வார்டு காமராஜர் நகர் 2வது தெருவில் கழிவுநீர் வடிகால் அடைபட்டதால் கழிவு நீர் தெருவில் தேங்கி சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.
50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் ஏற்கனவே இருந்த கழிவுநீர் வடிகாலை தனிநபர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று தெரிவித்து அடைத்து விட்டனர்.
சில நாட்களாக கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதார கேடு நிலவுகிறது. இப்பகுதி மக்கள் புகாரில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றுகின்றனர். கழிவு நீர் வெளியேறிய சில மணி நேரத்தில் மீண்டும் தேங்கி விடுகிறது.
கழிவுநீரை கடந்தே இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. வடிகாலை மாற்றி அமைத்து நிரந்தரமாக சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

