/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆசிரியைக்கு தொந்தரவு ஆசிரியர் கைது
/
ஆசிரியைக்கு தொந்தரவு ஆசிரியர் கைது
ADDED : நவ 15, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: தேனிமாவட்டம் சின்னமனுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சேக்கிழார் மகன் மாரிச்செல்வம். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
போடி பகுதி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக ஒருவர் பணியாற்றி வருகிறார். இருவரும் தேனியில் நடந்த பயிற்சிக்கு சென்ற போது, ஆசிரியையிடம் மாரிச்செல்வம் அறிமுகமானார். இந்த நட்பை பயன்படுத்திய அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். நட்பை ஆசிரியை முறித்துக்கொண்டார். மாரிச்செல்வம், ஆசிரியை பற்றி அவதுாறு செய்தி வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அவர் தேனி எஸ்.பி. சினேகபிரியாவிடம் புகார் அளித்தார். சின்னமனுார் போலீசார் மாரிச்செல்வத்தை கைது செய்தனர்.

