/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் லோக்சபாவில் தேனி எம்.பி., வலியுறுத்தல்

ADDED : டிச 07, 2025 06:05 AM
தேனி: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் லோக்சபாவில் பேசினார்.
அவர் லோக்சபாவில் பேசியதாவது: மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 3 முறை லோக்சபா உறுப்பினர், 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். நேதாஜிசுபாஷ் சந்திர போஸின் தாக்கத்தினால் 19 வயதில் சுதந்திர இயக்கத்தில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். இதற்காக 4ஆயிரம் நாட்கள் சிறையில் இருந்தார். தமிழகத்தில் பார்வர்டு பிளாக் அமைப்பை ஒருங்கிணைத்து மாநில தலைவராகவும், அக்கட்சியின் துணை தலைவராகவும் பணியாற்றினார்.
காந்தியின் சீடராக கைத்தறி பயன்பாடு, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய காந்திய கொள்கைகளுக்காக பாடுபட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஹரிஜன மக்களைவழிபாட்டிற்கு அழைத்து சென்றார்.
குற்றவியல் பழங்குடியினர் சட்டத்திற்கு எதிராகவும், விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தார். விவசாயிகள் சங்கத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.
ஜமீன்தாரி முறை ஒழிக்க போராடினார். 1963ல் அக்.,30ல் மதுரையில் காலமானர். சுதந்திர போராட்ட வீரர், ஆன்மீகவாதி, தொழிலாளர் தலைவர், குற்றவியல் பழங்குடியினர் சட்ட எதிர்ப்பாளரான பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பரத ரத்னா விருதினை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.