/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வன்கொடுமை வழக்கில் முன் ஜாமின் பெற வந்த தி.மு.க., பேரூராட்சி செயலர் கைது தேனி எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ADDED : நவ 15, 2025 01:37 AM
தேனி: தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி, துணை தலைவர் ஞானமணி இடையே ரோடு அமைக்கும் பணி தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமின் பெற வந்த துணைத்தலைவர் ஞானமணி கணவர் தி.மு.க., பேரூராட்சி செயலாளர் தமிழன் 46, அவரது டிரைவர் முகமது ஆசிக் 35, ஆகியோர் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்பட்டனர்.
கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராகவுள்ள தமிழ்செல்வி (தி.மு.க.), பட்டியல் இனத்தவர். துணைத்தலைவராக மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஞானமணி (தி.மு.க.) உள்ளார். துணை தலைவரின் கணவர் தமிழன் தி.மு.க., பேரூராட்சி செயலாளராக உள்ளார்.
பேரூராட்சியில் பட்டிமந்தை சாலையில் ரூ.1.18 கோடியில் ரோடு அமைக்கும் பணி துவங்கியது. இப்பணியை துணைத் தலைவரின் ஆலோசனையின்படி உரிய பணி ஆணை பெறாமல் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனையறிந்த பேரூராட்சி தலைவர், 13 வது வார்டு கவுன்சிலர் ராஜவேல், அவரது ஆதரவாளர்கள் ஆக., 6ல் பணி செய்ய விடாமல் தடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தலைவர், துணைத்தலைவர் ஆதரவாளர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மறியலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி புகாரில் துணைத்தலைவர் ஞானமணி, அவரது கணவர் தமிழன், மகன் ஸ்டீபன், டிரைவர் முகமது ஆசீக் மீது எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் ஸ்டீபன் முன்ஜாமின் பெற்றார். தமிழன், டிரைவர் ஆசிக் முகமுது முன்ஜாமின் பெற உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு அளித்தனர். உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தை நாட அவர்களுக்கு அறி வுறுத்தியது.
அதன்படி எஸ்.சி., எஸ்.டி., நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு அளிக்க வந்த தமிழன், டிரைவர் முகமது ஆசிக்கை கைது செய்ய நீதிபதி அனுராதா உத்தரவிட்டார். தேவதானப்பட்டி போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர்.
இருவரும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறினர். பின் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு பின் கைது செய்யப்பட்டனர்.