/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் மின் மீட்டகளுக்கு தொடரும் தட்டுப்பாடு புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
/
மாவட்டத்தில் மின் மீட்டகளுக்கு தொடரும் தட்டுப்பாடு புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
மாவட்டத்தில் மின் மீட்டகளுக்கு தொடரும் தட்டுப்பாடு புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
மாவட்டத்தில் மின் மீட்டகளுக்கு தொடரும் தட்டுப்பாடு புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
ADDED : டிச 09, 2025 06:45 AM

கம்பம், மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகங்களில் மின் மீட்டர் தட்டுப்பாடு தொடர்வதால் புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் இணைப்பு பெற முடியாமல் தவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே மீட்டர் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி, மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர். தற்போது மின் இணைப்பு வழங்கினாலும், மீட்டர் இல்லாததால் பயனற்ற நிலை உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் வழங்க இருப்பதால் பழைய வகை மீட்டர்கள் வரவில்லை என மின்வாரிய பணியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஸ்மார்ட் மீட்டரும் வழங்குவதில்லை. இந்நிலையில் மீட்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க கடந்தாண்டு தனியார் கடைகளில் மீட்டர் வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்படும் எனன அறிவித்தனர். ஆனால் அந்த அறிவிப்பிற்கும் முறையான விதிமுறைகள் வகுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் புது வீடு கட்டும் பொதுமக்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். கட்டுமான நிறுவனங்கள் நடத்துபவர்களும், புதிய இணைப்பு வாங்கியும், மீட்டர் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து மின்வாரிய அலுவலங்களில் விசாரித்த போது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையில் உள்ளது. தனியாரிடம் வாங்கி கொள்ள மாவட்டத்தில் மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. ஆனால் அதில் சில சிக்கல்கள் எழுந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. விரைவில் மீட்டர் தட்டுப்பாடு நீங்கும் என்கின்றனர்.
ஒவ்வொரு துணை மின்நிலைய கட்டுப்பாட்டிலும் மீட்டர் கேட்டு நூற்றுக்கணக்கில் நுகர்வோர் காத்திருக்கின்றனர். சிலர் புதிய மின் இணைப்பு பெற்று மீட்டர் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளனர். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு செக்ஷனுக்கு 5 நுகர்வோர் வரை மீட்டர் கோரி விண்ணப்பிக்கின்றனர். குறைந்தது 45 நாட்களான பின் தான் மீட்டர் கிடைக்கிறது. எனவே மின் இணைப்பு பெற்றவுடன் மீட்டர் பொருத்த வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

