/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழந்தை கடத்தல் கும்பல் என மூவர் போலீசில் ஒப்படைப்பு; போலீசார் எச்சரிக்கை

ADDED : மார் 15, 2024 06:36 AM
மூணாறு : குழந்தை கடத்தல் கும்பல் என கருதி, 'காஸ் ஸ்டவ்' விற்க வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மூணாறு பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக ' வாட்ஸ் அப்' உள்பட சமூக வலைதலங்களில் ஒருவாரமாக தகவல் பரவி வருகிறது.
அதனால் மக்கள் அச்சம் அடைந்த நிலையில் மூணாறு காலனி பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் நடமாடினர். அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என கருதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். மூணாறு போலீசார் மூவரையும் மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில் மூவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் காலனி பகுதியில் தங்கும் விடுதியில் தங்கி ' காஸ் ஸ்டவ் ' விற்பனை நடத்தி வருவதாகவும் தெரியவந்தது. அவர்களின் அடையாள அட்டை, வாகனத்தின் ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி சரி பார்த்தனர். அவர்கள் மீது எவ்வித சந்தேகங்களும் இல்லாததால் போலீசார் அனுப்பி வைத்தனர்.
எச்சரிக்கை: சமூக வலைதலங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவல்களை பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.