மூணாறில் தொடரும் போக்குவரத்து நெரிசல் :மாற்று ஏற்பாடு இல்லாததால் அவதி
மூணாறில் தொடரும் போக்குவரத்து நெரிசல் :மாற்று ஏற்பாடு இல்லாததால் அவதி
UPDATED : ஜூலை 07, 2026 04:54 PM
ADDED : ஜூலை 07, 2026 04:50 PM
மூணாறு;மூணாறில் நிலச்சரிவு பிரச்னை, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நான்காம் நாளாக நேற்று போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது.
கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பழைய மூணாறில் சி. எஸ்.ஐ., சர்ச் அருகே ரோடு அகலப்படுத்தும் பணிக்கு மண் எடுக்கப்பட்ட பகுதியில் ஜூலை 4ல் விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டது. இதனால் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து பழைய மூணாறு செல்லும் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. புறவழிச்சாலை வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருவதால் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது. இதனால் பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் நெரிசலில் சிக்கின.
மூணாறில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மூணாறு செல்வதை முடிந்தவரை தவிர்க்க இடுக்கி கலெக்டர் தினேசன் செருவாட் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்தால் நேற்று நான்காம் நாளாக போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது. மாற்று ஏற்பாடு இல்லாததால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதியடைவது தொடர்கிறது.
