தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு: மீன் வரத்து குறைந்தது

வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு: மீன் வரத்து குறைந்தது

வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு: மீன் வரத்து குறைந்தது


UPDATED : நவ 01, 2026 04:08 PM

ADDED : நவ 01, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 04:08 PM ADDED : நவ 01, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: கடந்த சில வாரங்களாக வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பதால் வலையில் பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வைகை அணையில் மீன்வளத் துறை சார்பில் ஆண்டு தோறும் லட்ச கணக்காண மீன் குஞ்சுகள் விடப்படும். அவை வளர்ந்த பின் ஆண்டு முழுவதும் பிடித்து விற்பனை செய்யப்படும். அணையில் பிடிக்கப்படும் மீன்கள், பொதுமக்களுக்கு நேரடியாகவும், வியாபாரிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல், மே யில் அணை நீர்மட்டம் 30 அடிக்கும்கீழ் குறைந்ததால் வலையில் அதிக அளவில் மீன்கள் கிடைத்தன. கூடுதல் மீன்கள் கேரளவிற்கு அனுப்பபட்டது. தற்போது நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் குறைந்த அளவு மீன்கள் வலைகளில் சிக்குகின்றனர்.

மீனவர்கள் கூறியதாவது: வைகை அணையில் நீர்த்தகத்தில் கட்லா, மிருகாள், ரோகு, ஜிலேபி வகை மீன்கள் அளவில் உள்ளன. நீர்மட்டம் குறைந்த போது தினசரி 2 டன் மீன்கள் வரை பிடிக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 50 அடியை கடந்துள்ளதால் தினசரி சுமார் 500கிலோ மீன்கள் பிடிக்கப்படுகிறது. 2 கிலோ முதல் 10 கிலோ வரையிலான மீன்கள் அணையில் இல்லை. சிறிய அளவிலான மீன்கள் மட்டும் உள்ளது. சமீபத்தில் வளர்ப்பிற்காக விடப்பட்ட மீன்கள் வளர்ந்த பின் பெரிய மீன்கள் கூடுதலாக கிடைக்கும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us