/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் தொடரும் நெரிசல்; ஒருவழி பாதையாக மாற்றுவது எப்போது
/
குமுளி மலைப்பாதையில் தொடரும் நெரிசல்; ஒருவழி பாதையாக மாற்றுவது எப்போது
குமுளி மலைப்பாதையில் தொடரும் நெரிசல்; ஒருவழி பாதையாக மாற்றுவது எப்போது
குமுளி மலைப்பாதையில் தொடரும் நெரிசல்; ஒருவழி பாதையாக மாற்றுவது எப்போது
ADDED : டிச 02, 2025 05:41 AM
கூடலுார்: சபரிமலை மண்டல காலத்தில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் குமுளி மலைப் பாதையில் தினந் தோறும் மாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். கலெக்டர் அறிவித்த ஒரு வழிப்பாதை கானல் நீராகி யுள்ளது.
சபரிமலையில் மண்டல காலம் துவங்கி இரண்டு வாரங்கள் ஆகிறது. மண்டல காலம் துவங்குவதற்கு முன் தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேக்கடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் குமுளி மலைப்பாதையில் கூடுதல் பக்தர்களின் வாகனங்கள் வரும் வாய்ப்புள்ளதால் ஒருவழிப்பாதை அமல்படுத்துவது என, அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரங்களாக தினந்தோறும் மாலை 5:00 மணிக்கு துவங்கும் நெரிசல் இரவு 10:00 மணி வரை மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றன. இதுவரை ஒருவழிப்பாதை அமல்படுத்துவதற்கான அறிகுறியே இல்லை.
சபரி மலை செல்லும் வாகனங்கள் குமுளி மலைப்பாதை வழியாகவும், சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் கம்பமெட்டு வழியாகவும் செல்ல ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் குமுளி வராமல் சென்று விடுவதால் குமுளியில் வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறி வியாபாரிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். இதன் காரணமாகவே ஒரு வழிப்பாதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்கள் தினந்தோறும் மாலையில் குமுளியில் இருந்து 15 க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சென்னை, கோவை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த பஸ்களால் மலைப் பாதையில் நெரிசல் அதிகமாக உள்ளது. மண்டல, மகரவிளக்கு உற்ஸவம் முடியும் வரை லோயர்கேம்ப் அருகே ஆம்னி பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

