/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புத்தக திருவிழா அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
/
புத்தக திருவிழா அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : டிச 09, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் இம்மாத இறுதியில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா நடத்தப்பட உள்ளது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பணிகளை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். புத்தக திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒவ்வொரு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், அறிஞர்கள் கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

