/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆயுள் தண்டனை பெற்ற டி.எஸ்.பி.,க்கு ஜாமின்
/
ஆயுள் தண்டனை பெற்ற டி.எஸ்.பி.,க்கு ஜாமின்
ADDED : டிச 03, 2025 03:47 AM

தூத்துக்குடி மாவட்டம் அலங்கார தட்டுவைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பள தொழிலாளி. 1999ல் நாட்டு வெடிகுண்டு வழக்கில் தாளமுத்துநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 1999 செப்டம்பர் 18 போலீஸ் விசாரணைக்கு சென்ற போது ஸ்டேஷனில் போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார் எழுந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இச்சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ.,யாக இருந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உட்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இருவர் விடுவிக்கப்பட்டனர். டி.எஸ்.பி., உட்பட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. அனைவரும் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் 11 வதாக குற்றம்சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அ வருக்கு ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.

