/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
/
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
ADDED : டிச 07, 2025 07:26 AM

திருநெல்வேலி: அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகளை திறக்கப்படும் முன் உடைத்த விஷமிகளை போலீசார் தேடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவியருக்காக, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கழிப்பறைகள் அரசு நிதியில் கட்டப்பட்டிருந்தன.
இவை இன்னும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுவதற்கும் முன்பாகவே, அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் அவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சுவர்கள், கதவுகள், தண்ணீர் குழாய்கள் உள்ளிட்டவை பெருமளவில் உடைக்கப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகம் புகாரில், பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.