/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
டூ - வீலர் திருடிய வழக்கில் விஜய் கட்சி நிர்வாகி சிக்கினார்
/
டூ - வீலர் திருடிய வழக்கில் விஜய் கட்சி நிர்வாகி சிக்கினார்
டூ - வீலர் திருடிய வழக்கில் விஜய் கட்சி நிர்வாகி சிக்கினார்
டூ - வீலர் திருடிய வழக்கில் விஜய் கட்சி நிர்வாகி சிக்கினார்
ADDED : நவ 15, 2025 01:33 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டில் டூ - வீலர் திருடிய நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 26; தனியார் வங்கி ஏ.டி.எம்., பணம் நிரப்பும் பணி செய்கிறார். நவ., 12ல் புதிய பஸ் ஸ்டாண்டில் ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வந்தார். டூ - வீலரை பஸ் ஸ்டாண்ட் ஓரம் நிறுத்தினார்.
பணம் நிரப்பி விட்டு திரும்பிய போது, டூ - வீலர் மாயமாகியிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். அதில் இருவர் திருடு போன டூ - வீலரை தள்ளிக்கொண்டு செல்வதை போலீசார் கண்டனர். போலீசாரை பார்த்து அவர்கள் தப்ப முயன்றனர். இருப்பினும், போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துகுமார், 37; என்பதும், டூ - வீலர் ஒர்க் ஷாப் நடத்தி வரும் அவர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி என்பதும் தெரிந்தது. மற்றொருவர் நாங்குநேரியை சேர்ந்த தங்கராஜா, 33; என தெரிந்தது.
பஸ் ஸ்டாண்டில் அவர்கள் திருடிய ஐந்து டூ - வீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

