/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி ரகளை செய்த எட்டுபேர் கைது
/
டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி ரகளை செய்த எட்டுபேர் கைது
டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி ரகளை செய்த எட்டுபேர் கைது
டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி ரகளை செய்த எட்டுபேர் கைது
ADDED : மார் 21, 2024 09:16 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில், ராமநாதபுரம் மாவட்டம், பாகூர் பகுதியை சேர்ந்த பிரேம்நாத், 21, என்பவர் வேலை செய்து வருகிறார்.
கடந்த, 18 ம் தேதி இரவு, அவர் பணியில் இருந்தபோது, போதையில் வந்த கும்பல் பாரில் ரகளையில் ஈடுபட்டது. பிரேம்நாத்திடம் மதுபானம் கேட்டு தகராறு செய்தது. தரமறுத்ததால், பீர்பாட்டிலால் பிரம்நாத்தின் தலையில் தாக்கியும், அரிவாளால் கை, கால்களில் வெட்டிவிட்டும் தப்பியது.
காயம் அடைந்த பிரேம்நாத், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாரில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி அரிவாளால் வெட்டும் காட்சிகளும், அதில் ஈடுபட்டவர்களின் விபரமும் தெரிந்தது.
அதையடுத்து நேற்று முன்தினம், மீஞ்சூர் அடுத்த மேலுார் பகுதியை சேர்ந்த பிரசாந்த், 19, மீஞ்சூர் மேட்டுக்காலனி ஹரிஷ், 19, கொண்டக்கரை ஹரிபிரசாத், 19, பாரதிராஜன், 28, மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் சிவனேசன், 19, கவுண்டர்பாளையம் லோகேஷ், 21, உதயகுமார், 21, வெள்ளம்பாக்கம் கார்த்திக், 21 ஆகிய எட்டுபேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

