ADDED : ஜூலை 29, 2026 03:41 PM
திருவள்ளூர், ஜூலை 30–
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில், கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின் வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட, வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும், மனு அளித்து தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
