/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையோரம் கழிவு கொட்டும் லாரி
/
நெடுஞ்சாலையோரம் கழிவு கொட்டும் லாரி
ADDED : ஆக 26, 2024 11:17 PM

திருத்தணி: திருத்தணி நகரத்தில் குடியிருப்புகளில் சேறும் மனிதக் கழிவுகளை செப்டிக் டேங்க் லாரிகள் மூலம் உறிஞ்சப்படுகிறது. இதற்காக திருத்தணியில், 10க்கும் மேற்பட்ட செப்டிக் டேங்க் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரியின் ஓட்டுனர்கள் மனிதக் கழிவுகளை யாரும் பாதிக்காத வண்ணம், அனுமதிக்கப்பட்ட இடத்தில் கழிவுகளை விடவேண்டும்.
ஆனால், திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, கோரமங்கலம், அகூர் இடையே மாநில நெடுஞ்சாலையோரம் கழிவுகளை விடுகின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நோய் பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளதால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, மாநில நெடுஞ்சாலையோரம் லாரிகளால் கொட்டப்படும் மனிதக் கழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

