தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் மீது போக்சோ வழக்கு


ADDED : ஜூலை 02, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி, ஜூலை 3–

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 63 வயது முதியவர் மீது ‘போக்சோ’ வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

பொன்னேரி பகுதியை சேர்ந்த, 41வயது பெண், தன் 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

முதல் கணவரை விவகாரத்து செய்த நிலையில், 63 வயது முதியவர் ஒருவரை, இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார். சமீபகாலமாக, அவருடனும் தொடர்பின்றி உள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பொன்னேரியில் உள்ள தன் வீட்டிற்கு வந்த இரண்டாவது கணவரான முதியவர், தனியாக இருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில், அப்பெண் புகார் அளித்தார்.

அதையடுத்து, முதியவர் மீது, போக்சோ பிரிவின்கீழ் வழக்கு பதிந்த மகளிர் போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us