பாதுகாப்பை உறுதிப்படுத்த சோலார் ‘சிசிடிவி’ வழங்கல்
பாதுகாப்பை உறுதிப்படுத்த சோலார் ‘சிசிடிவி’ வழங்கல்
ADDED : ஜூலை 02, 2026 06:11 PM
திருத்தணி, ஜூலை 3–
மேல்கசவராஜ்பேட்டை கிராமத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சூரிய ஒளி தெரு விளக்குகள் மற்றும் சோலார் ‘சிசிடிவி’ கேமராக்கள், தமிழக மகளிர் பேரவை சார்பில் வழங்கப்பட்டன.
திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் ஊராட்சி, மேல் கசவராஜ்பேட்டை கிராமத்தில், கிராம மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, தமிழக மகளிர் பேரவை சங்கம் சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 சூரிய ஒளி தெரு விளக்கு, 2 சோலார் ‘சிசிடிவி’ கேமராக்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், தமிழக மகளிர் பேரவை தலைவர் பத்மாவதி பங்கேற்று, மேற்கண்ட பொருட்கள் வழங்கி பேசியதாவது:
இரண்டு முக்கிய தெருக்களில், உயர்தர சூரிய ஒளி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு, இரவு நேர பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது.
மேலும், கிராம மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டு சோலார் கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
