பயணியை தாக்கி மொபைல் போன் பறித்த இருவர் போலீசில் ஒப்படைப்பு
பயணியை தாக்கி மொபைல் போன் பறித்த இருவர் போலீசில் ஒப்படைப்பு
UPDATED : ஜூன் 11, 2026 04:08 PM
ADDED : ஜூன் 11, 2026 04:01 PM

பொன்னேரி:ரயில் பயணியை தாக்கி, மொபைல் போனை பறித்த இருவர், கொருக்குபேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன், 34. இவர், ஜூன் 10 ல் சொந்த வேலையாக, கும்மிடிப்பூண்டி செல்வதற்காக புறநகர் ரயிலில் பயணித்தார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற ரயில், நந்தியம்பாக்கம் நிலையத்தில் நின்றது. அப்போது, அதே ரயிலில் ஏறிய இருவர், குமரேசனின் கையில் இருந்த மொபைல் போனை பறித்தனர். அதை தடுத்த குமரேசனின் வயிற்றில் பிளேடால் கிழித்துவிட்டு, ரயிலில் இருந்து குதித்தனர்.
மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓடிய இருவரையும், குமரேசன் மற்றும் சக பயணியர் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
இது குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசாரிடம், பயணியர் பிடித்து வைத்திருந்த இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள், சென்னை, பாரிமுனை பகுதியை சேர்ந்த ஹரி, 29, காசிமேடு பகுதியை சேர்ந்த பாலு, 40, என்பது தெரிந்தது.
காயம் அடைந்த குமரேசன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் தொடர்பாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, பயணியை தாக்கி மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட ஹரி, பாலு, ஆகியோரை கைது செய்தனர்.
