ADDED : பிப் 25, 2025 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:கீழாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி சுந்தரம்மாள்,60. இவருக்கு, கடந்த 22ம் தேதி, மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரது உறவினர், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர் பரிசோதனை செய்து நான்கு நாட்கள் அவசர பிரிவில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தினர். அதன்படி மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, சுந்தரம்மாள் மருத்துவமனை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்கத் தாலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

