/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட பள்ளி சிறுவன்
/
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட பள்ளி சிறுவன்
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட பள்ளி சிறுவன்
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட பள்ளி சிறுவன்
ADDED : மார் 31, 2023 11:37 PM
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயதுடைய சிறுவர்கள் இரண்டு பேர் நேற்று முன்தினம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், சிறுவன் தமிழ்செல்வன் காயம் அடைந்தான்.
ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு மருத்துவர்கள் தமிழ்செல்வன் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிந்து, மற்றொரு 14 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர். பின், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
எம்.எல்.ஏ.,வை முற்றுகை உறவினர்கள்
மாணவன் தமிழ்செல்வன் வீட்டிற்கு, அஞ்சலி செலுத்த பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை.சந்திரசேகர் சென்றார். அங்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின், உறவினர்கள், அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ., துரை சந்திரசேகரை முற்றுகையிட்டனர்.
'இறந்த மாணவனின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பள்ளியில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., துரை. சந்திரசேகர் தெரிவித்தார்.