தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பள்ளி வளாகத்தில் இருந்த அரச மரம் முறிந்து விபத்து

 பள்ளி வளாகத்தில் இருந்த அரச மரம் முறிந்து விபத்து

 பள்ளி வளாகத்தில் இருந்த அரச மரம் முறிந்து விபத்து


ADDED : ஜூலை 03, 2026 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் இருந்த அரசமரம், நேற்று முறிந்து விழுந்தது. இதில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சானுார் மல்லாவரம் அரசு தொடக்க பள்ளி வளாகத்தில், பழமையான அரசமரம் இருந்தது. நேற்று மாலை 4:00 மணியளவில், திடீரென இந்த மரம் முறிந்து விழுந்தது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்ததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 4:10 மணிக்கு பள்ளி நேரம் முடிந்து, மாணவர்கள் வெளியேறுவதற்கு சற்று முன்னதாக, இந்த சம்பவம் நடந்துள்ளது.

காலை இறை வணக்கம் மற்றும் விளையாட்டு பாடவேளையில், மாணவர்கள் இந்த மரத்தடியில் தான் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us