/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் மீண்டும் களமிறங்கும் ஜெகத்ரட்சகன்
/
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் மீண்டும் களமிறங்கும் ஜெகத்ரட்சகன்
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் மீண்டும் களமிறங்கும் ஜெகத்ரட்சகன்
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் மீண்டும் களமிறங்கும் ஜெகத்ரட்சகன்
ADDED : மார் 19, 2024 08:43 PM
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தற்போது தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் உள்ளார். இவர், 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பின், சரியாக தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.
தமிழக முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மட்டுமே எம்.பி., ஜெகத்ரட்சகன் வந்து செல்வார்.
தொகுதி மக்கள் எம்.பி.,யை பார்க்க வேண்டும் என்றால், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தான் பார்த்து கோரிக்கைகள் மற்றும் சிபாரிசு கடிதம் பெற வேண்டும்.
இதனால், தொகுதி மக்கள் ஜெகத்ரட்சகன் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுதவிர, அடுத்த மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அமைச்சர் காந்தி மகன் வினோத்காந்தி, தற்போதைய எம்.பி., ஜெகத்ரட்சகன் இடையே சீட் பெறுவதில் கடும் போட்டி நிலவி வந்தது.
இதனால் தி.மு.க., கூட்டணியில் அரக்கோணம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என, ஆளும் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்றுமுதல்வர் ஸ்டாலின் அரக்கோணம் தொகுதி தி.மு.க.,விற்கு தான் என உறுதி செய்தார்.
இந்நிலையில், மீண்டும் அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் தான் போட்டியிட உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
வேட்பாளர் அறிவித்தவுடன் கட்சி நிர்வாகிகள், அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஈசானா மூலையான திருத்தணி சட்டசபை தொகுதியில் உள்ள கரீம்பேடு ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு திட்டமிட்டு, அதற்கான பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
- நமது நிருபர் -

