/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
/
திருத்தணி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
திருத்தணி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
திருத்தணி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
ADDED : டிச 07, 2025 06:43 AM

திருத்தணி: ஜம்பு- காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த திருத்தணியை சேர்ந்த ராணுவ வீரர் சக்திவேல் குண்டடிப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல், 30, இவர் 2018 முதல், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
பயங்கரவாதிகள் கடந்த 4ம் தேதி காலை ஜம்பு- காஷ்மீர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது, பயங்கரவாதிகள் தாக்குதலில் குண்டடிப்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல் நேற்று முன்தினம் இரவு தனிவிமானம் மூலம் புதுடில்லிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ மரியாதை செய்த பின் நேற்று காலை, 6:00 மணிக் கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து அரசு ஆம்புலன்ஸ் மூலம் காலை 9:30 மணிக்கு திருத்தணி அடுத்த சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மதியம் 12:00 மணியளவில் ராணுவ அதிகாரிகள் வந்து, சக்திவேல் உடல் மீது தேசிய கொடி போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்திய பின், சக்திவேல் பெற்றோர், மனைவியிடம் ஒப்படைத்தனர்.
அஞ்சலி பின் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், எஸ்.பி., விவேகானந்த சுக்லா, அரக்கோணம் தி.மு.க.,- எம்.பி., ஜெகத்ரட்சகன், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன், திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, அரக்கோணம் முன்னாள் எம்.பி., அரி உட்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சக்திவேல் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மாலை 5:00 மணிக்கு சத்திரஞ்ஜெயபுரம் சுடுகாட்டில் திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில் போலீசார், 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். பின், ராணுவ வீரர் சக்தி வேல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

